
நாளை சுதந்திர தினம் (ஆகஸ்டு 15) விடுமுறை மற்றும் சனி ஞாயிறு விடுமுனை என்பதால் ரயில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும். அதனால் மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளதுடன், ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவைகள் பல ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுமுறை தினத்தை ஒட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், அதன்படி நாளை காலை 5 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 வரை 10 நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் , பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புறநகர் ரயில் சேவைகள் ரத்து குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.