சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக முடக்கப்பட் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7ந்தேதிமுதல் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது மெட்ரோ  ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது.  அதன்படி காலை 5.30 மணி முதல் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த புதிய சேவை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து 5வது கட்ட தளர்வாக பொதுப் போக்குவரத்துக்கும் தமிழக அரசு பச்சைக்கொடி காட்டியது. இதையடுத்து, சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில், செப்டம்பர் 7ந்தேதிமுதல் பொதுப்போக்குவரத்து, மற்றும்மெட்ரோ ரயில் சேவை, சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பின்னர் காலை பண்டிகை காலங்களில் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது புதிய சேவை நேரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி,   திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணிக்கு பயணகள் சேவை தொடங்கி இரவு 11 மணி நடைபெறும் என்றும்,  பீக் அவரில் 7 நிடத்துக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 7 மணிக்கு ரயில் சேவை தொடங்கி இரவு 10 மணியுடன் முடிவடையும் என்றும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த புதிய மாற்றம் நாளை முதல் (8ந்தேதி) அமலுக்கு வருகிறது.