டில்லி
இன்று முதல் தேஜ் என்னும் புதிய டிஜிட்டல் பேமெண்ட் அப்ளிகேஷன் ஒன்றை கூகுள் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பேமெண்ட் எனப்படும் ஆன்லைன் பணப்பட்டுவாடா பலராலும் விரும்பி பின்பற்றப்படுகிறது. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்த உள்ள அப்ளிகேஷனின் பெயர் தேஜ் ஆகும். இது ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு ஆகிய இரு சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் ஒரே அப்ளிகேஷன் என சொல்லப்படுகிறது.
இதற்கு அறிமுகச் சலுகையாக நீங்கள் பரிந்துரை செய்யப்படுபவர் முதலில் பணம் செலுத்தும் போது உங்களுக்கு ரூ.51 கிடைக்கும். இந்த முறையில் ஒரு பயனாளி ஆண்டுக்கு சுமார் ரூ.9000 வரை பணம் பெறலாம். நீங்கள் அழைக்கும் நபருக்கு முதல் பணம் செலுத்தும் போது மட்டுமே இது கிடைக்கும். அதாவது ஒரு முறை மட்டுமே கிடைக்கும். இந்த சலுகை 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1 வரை உள்ளது.
இதை உபயோகிப்பதற்கான வழிமுறை இதோ :
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் இதை டவுன்லோடு செய்துக் கொள்ள வேண்டும்
ஸ்டெப் 1 : உங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுக்கவும். இந்த அப்ளிகேஷன் இந்திய மொழிகள் பலவற்றையும் சப்போர்ட் செய்யும்.
ஸ்டெப் 2 : நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் கொடுத்துள்ள மொபல் நம்பரை பதிவு செய்யவும்
ஸ்டெப் 3 : உங்கள் கூகுள் அக்கவுண்டை பதிவு செய்யவும். இதன் மூலம் உங்களுக்கு செய்திகள் கிடைக்கும்.
ஸ்டெப் 4 : இதற்கான லாக் மற்றும் பாஸ்வார்டுகளை பதிந்து அதை கன்ஃபர்ம் செய்துக் கொள்ளவும்
ஸ்டெப் 5 : உங்கள் வங்கி பெயர், கிளை, ஐஎஃப்எஸ்சி கோட் ஆகியவைகளை பதியவும்
இனி நீங்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் பணம் செலுத்த முடியும்.
இது தவிர ரொக்கமாக பணம் செலுத்தும் முறையும் இந்த அப்ளிகேஷனில் அளிக்கப்பட்டுள்ளது.