குங்குமப் பொட்டு வைக்கும் முறை
நாம் நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை என்னவென்று பார்ப்போம்,.
Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பொதுவாகப் பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். எப்போதும் குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். குங்குமங்களில் சிவப்பு நிற குங்குமமே புனிதமானது என்பதால் பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
பெண்கள் தங்கள் மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவது மிகவும் உத்தமமானது.
நாம் கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குக் குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். குங்குமம் அளிக்கும் பெண்கள் முதலில் குங்குமத்தைத் தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
குங்குமத்துக்குத் தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ளதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். குறிப்பாக ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.