நைஜீரியா
எரிவாயு எண்ணெய் டேங்கர்கள் எடுத்துக் கொண்டு 22 இந்தியர்களுடன் சென்ற வணிகக் கப்பல் ஒன்று மேற்கு ஆப்ரிக்காவில் மாயமாகி உள்ளது.
பனாமா நாட்டுக் கொடியுடன் ஒரு வணிகக் கப்பல் எரிவாயு எண்ணெய் டேங்கர்கள் எடுத்துக் கொண்டு மேற்கு ஆப்பிரிக்க கடலில் சென்றுக் கொண்டு இருந்துள்ளது. அந்தக் கப்பலில் பணிபுரிந்தவர்களில் 2 கேரளத்தினர் உட்பட 22 பேர் இந்தியர்கள் ஆவார்கள். மாலுமிகள் அவ்வப்போது கப்பலின் உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்வது வழக்கம்.
கடந்த 1 ஆம் தேதிக்குப் பின் கப்பலில் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் உள்ளது. அதையொட்டி அந்தக் கப்பலில் உரிமையாளர்கள் மும்பை கப்பல் போக்குவரத்து இயக்ககத்தின் உதவியை நாடியுள்ளனர். ஆனால் கப்பல் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் உள்ளது. அந்தப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அருகில் உள்ள நைஜீரிய நாட்டு உயரதிகாரிகளிடம் தகவல் அனுப்பப்ப்ட்டுள்ளது.
நைஜீரிய நாட்டுக் கடற்படை, சர்வதேச கடல் மேலாண்மை வாரியம், கடற்கொள்ளை தடுப்பு மையம் ஆகியவை இணைந்து கப்பலை தேடி வருகின்றன. வணிகக் கப்பல் ஒருவேளை கடத்தப் பட்டிருக்கலாம் என்னும் கோணத்திலும், மூழ்கி இருக்கலாமோ என்னும் அச்சத்திலும் கப்பல் உரிமையாளர்கள் ஆழ்ந்துள்ளனர்.