முலாம்பழம் ((Melon Fruit) ஊட்டச்சத்து விபரங்கள்
http://nutrition.agrisakthi.com/detailspage/MELON,%20MUSK/171

வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவருக்கும் நாவறட்சி, சிறுநீர் கடுப்பு , உடல் வெப்பம் போன்றவை பெரும் பிரச்னையாக இருக்கலாம். வெயில்காலங்களில் முலாம்பலம் உண்பதின் மூலம் மேற்கண்ட பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்

முலாம்பழத்தில் இருக்கும் அதிக ஊட்டச்சத்தினால் உடல் ஆரோக்கியம் தோல் பளபள வென இருக்கும். , நோய் எதிர்ப்புத்திறனை அதிகம் கொண்ட ஒரு பழமாக இருக்கும். இந்தப் பழத்தினை அதிகம் உண்பதில் அதிகமாக சோடியம் பொட்டாசியம், இருதயத்தினை பலப்படுத்தவும், இரத்த உயர் அழுத்தத்தினை சீர் செய்யவும், உடலில் இருக்கும் நீர் மற்றும் தாதுக்களை  சரியாக வைத்துக்கொள்ள உதவுகிறது

வயிற்றில் ஏற்படக்கூடிய புண், ஜீரண குறைப்பாடுகள் இவைகளை நீக்கி சரி ஜீரணத்தினை சரி செய்கிறது.

மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது

வெயில்காலத்தில் வரக்கூடிய உடல் வெப்பம், நாவறட்சி , குறைந்த சக்கரை இவைகளைப்போக்கி உடலை புத்துணர்ச்சியாக வைக்கிறது.

இதில் பீட்டா கரோட்டின், ஆன்டாக்சிடெண்ட்ஸ் பார்வைக்குறைபாடுகளை சரி செய்து அது வராமலும் தடுக்கிறது.

உடல் எடையைக்குறைக்கவும், சிறுநீரகத்தில் கல் வராமலும் தடுக்கிறது, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுக்கிறது.  இதில் இருக்கக்கூடிய விட்டமின் கே, மெக்னீசியம் எலும்பின் தன்மையை பலப்படுத்துக்கிறது.

தூக்கமின்மை நோயை போக்க இது உறுதுணையாக அமைகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது
முடி வளர்வதற்கு உற்ற துணை புரிகிறது

விட்டமின் கே இரத்த உறைதலை சீர் செய்கிறது. இதனால் இருதயத்தில் உள்ள இரத்தக்குழாய் அடைப்புகளை சீர் செய்கிறது, அதிகமா கார்ப்போஹைட்ரேட் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை குறைத்து புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது

சித்த மருத்துவம்

நீர்பெருகும் கட்டுடையும் நீங்காத வெப்பமறும் பால் மங்கையர்பால் பஞ்சமிலை-சீர்பெருகும் நல்லமு லாம்பழத்தை நாவினிக்கத் தின்றவருக் கல்ல லினியே தறி.

சித்தர் பாடல்

சிறுநீர் எரிதல், உடலை நீர் பெருக்குதல், நா வறட்சி, உடல் சூடு நீங்கும்.
மாதற்கும் பால் சுரக்கும்

பயன்படுத்தும் முறை

சாறாக்காகி பயன்படுத்தலாம், அதில் சக்கரையை தவிர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும்

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS., PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
9942922002

— செல்வமுரளி