தொடர் இருமல் காரணமாக தமது பேரணியை ரத்து செய்தார் மெலனியா டிரம்ப்

Must read

வாஷிங்டன்: தொடர் இருமல் காரணமாக மெலனியா டிரம்ப், தமது பேரணியை ரத்து செய்தார்.

டிரம்ப் மாமனார், மாமியார்

பென்சில்வேனியாவில் உள்ள எரே பகுதியில் டிரம்புடன் இணைந்து மெலனியா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். அதிபர் தேர்தல் பிரசாரத்தில், கணவரும், அமெரிக்க அதிபருமான டிரம்புடன் முதல் முறையாக  ஒரே மேடையில் தோன்றி பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு  இருந்தார்.
ஆனால், தொடர் இருமல் காரணமாக, தமது பிரசாரத்தை மெலனியா டிரம்ப் ரத்து செய்துள்ளார்.  இது குறித்து கோவிட் -19 ல் இருந்து மீண்டதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நன்றாக உணர்கிறார்.
ஆனால் நீடித்த இருமலுடன், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் அவர் இன்று பயணம் செய்ய மாட்டார் என்று வெள்ளை மாளிகை அதிகாரியான ஸ்டீபனி கிரிஷாம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிரம்ப், மெலனியா மற்றும் மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article