டெல்லி: மேகதாது அணை விவகாரம் குறித்து 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா அரசு கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகிறது. இந்த அணை கட்டினால், தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், விவசாயிகள் கர்நாடக அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால், எதிர்ப்பை மீறி அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், அணை கட்ட அனுமதி வழங்கககூடாது என கடநத வாரம் அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று கூறிவரும் நிலையில், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, துரைமுருகனிடம், கேமதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கமாட்டோம் என அமைச்சர் தெரிவித்ததாகவும், தமிழகஅரசு அனுமதியின்றி அணை கட்ட முடியாது என தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, அடுத்த நாளே கர்நாட முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்று அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் சந்தித்து பேசினார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து  மேகதாது அணை விவகாரம் குறித்து 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநில முதல்வர்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் விரைவில் மேற்கொள்ள இருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.