கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் ஆடியோ கேசட்டில் பாடலைப் பதிவு செய்து தரும் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்). அந்த ஊருக்கு சர்க்கஸ் போட மகாராஷ்டிராவில் இருந்து வந்த குழுவில் இருக்கும் மெஹந்தியைப் (ஸ்வேதா திரிபாதி) , இவர்களிடையே காதல் முளைத்து அதில் சிக்கல் எழுந்து அதுவே ‘மெஹந்தி சர்க்கஸ்’.
சர்க்கஸில் நடக்கும் சாகசத்தைப் போல் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் தன் மகள் மீது 9 கத்திகளை வீச வேண்டும். அதில் ஒன்றுகூட அவள் மீது படக்கூடாது. அப்படி சாகசம் புரிந்தால் என் பெண்ணைக் கொடுக்கிறேன் என்கிறார் பெண்ணின் தந்தை , சாதி வேறுபாடு பார்க்கும் நாயகனின் தந்தை . இதனிடையில் காதல் என்னவாயிற்று ….
கடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா? அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே எளிமையான மீதி காதல் கதை. 1992-ல் ஆரம்பிக்கும் காதல் கதை 2010-ல் முடிவதாக ராஜுமுருகனும் இயக்குநர் சரவண ராஜேந்திரனும் கதை பின்னியிருக்கும் விதம் அலாதியானது.
கட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. ஜெயலலிதா பாடிய பாடல், ரோஜா படத்துக்கு இசையமைத்ததின் மூலம் ரஹ்மான் மீது எழுப்பப்பட்ட ஒன் டைம் வொண்டர் தொடர்பான கேள்விகள்- விமர்சனங்கள், இளையராஜாவின் இசை, கொடைக்கானல் சூழல், சர்க்கஸ் பின்னணி என படத்துக்கான வலுவான பின்னணி நுட்பமான காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் `மெஹந்தி சர்க்கஸ்’ இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது.