.

டில்லி,

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து 3 மாநில சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்துள்ளார்.

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய இருப்பதால், சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திரிபுரா சட்டசபை தேர்தலில் பிப்ரவரி 18 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மற்றும் நாகாலாந்தில் சட்டசபை தேர்தல்  பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 3 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை மார்ச் 3ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார்.

தலா 60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டமன்றம் மார்ச் 6ந்தேதியும்,  நாகாலாந்து சட்டமன்றம் மார்ச் 13ந்தேதியும்,  திரிபுரா சட்டப்பேரவையின் பதவி காலம் மார்ச் 14ந்தேதியும் முடிவடைய இருப்பதால், இந்த 3 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர் இன்று வெளியிட்டார்.