தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ராம்சரண் தேஜா விரைவில் தந்தையாகப் போகிறார்.

இந்த விவரத்தை ராம்சரணின் தந்தை மெகாஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோருக்கு அந்த பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனை குழுவின் துணை தலைவராக உள்ள உபாசனா மற்றும் ராம்சரண் திருமணம் 2012 ம் ஆண்டு ஜூன் 14 ம் தேதி சென்னையில் நடைபெற்றது.