சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இம்முகாம்களில் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel