சென்னை:
இறைச்சிக்காக மாடு, எருமை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த செல்வகோமதி என்பவர் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார்.
45 வயதாகும் இவர் சொசைட்டி ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன் டிரஸ்ட்டின் துணை இயக்குனர். இந்த அமைப்பு 1982ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்துள்ள செல்வகோமதி ஒரு சைவ பிரியர். எனினும் மத்திய அரசின் இந்த உத்தரவு மனித உரிமை மீறல் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘என்ன சாப்பிட வேண்டும்? என்பதை முடிவு செய்ய வேண்டியது ஒருவது தனிப்பட்ட உரிமையாகும். இதில் எப்படி ஒரு அரசாங்கம் தலையிட முடியும். மத சுதந்திரத்திற்கும் இது எதிரானதாகும்.
கிராமங்களில் மக்கள் கோவிலில் ஆடுகளை பலியிடும் நிகழ்கவுகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இத பாரம்பரிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாகும். மத்திய அரசின் புதிய உத்தரவு கலாச்சார உரிமை மற்றும் வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகும். இதற்காக பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் நீதித்துறை தான் இறுதி தீர்வு என்பதால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் ஒரு சுத்த சைவம். அதே சமயம் என்னை முட்டை சாப்பிட யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு செய்தால் இது வன்முறையாகும். அதேபோல் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சில இறைச்சிகளை சாப்பிடமாட்டார்கள்’’ என்றார்.
அவர் தொடர்ந்து கூறு¬¬யில், ‘‘ இதை யாரும் கட்டாயப்படுத்தினால் அது அவரது உரிமை மீறலாகும். மத்திய அரசின் புதிய அறிவிப்பால் எனக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால், குடிமகன்களின் உரிமை பாதிக்கப்படுகிறது. எனது அருகில் வசிப்பவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. அதனால் நான் இந்த வழக்தை தொடர்ந்தேன்.
நீண்ட காலமாக பால் கொடுக்காத ஒரு மாட்டை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும். விலங்குகளின் மீதான கவலை நியாயம் தான். அதே சமயம் மக்களின் உரிமை மீதான கவலையும் எனக்கு இருக்கிறது. மனிதனின் அடிப்படை உரிமை சட்டத்தின் ஆட்சியை விட மேலானது என்று நீதிபதி விஆர் கிருஷ்ண அய்யர் தெரிவித்துள்ளார்.
இது எனது தனிப்பட்ட போராட்டம் கிடையாது. பலதரப்பட்ட மக்களுக்கு பலதரப்பட்ட எண்ணங்கள் இருக்கும். ஆனால், எங்களது அமைப்பு வீடுகளில் நடக்கும் வன்முறை, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இதர மகளிர் உரிமை மீறல், குழந்தைகள் உரிமை மீறலுக்கு எதராக செயல்பட்டு வருகிறது. ஒரு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன் மக்கள் கருத்தை அறிய வேண்டும். அதனால் இந்த உத்தரவு வெளியான பிறகு நீதித்துறை வழியாக போராட முடிவு செய்தேன்’’என்றார்.