சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ்த் திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்று சந்தித்தார்.
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அப்படம் வெளிவர இருக்கின்றது. அந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்திருக்கிறார் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி.
அவர், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பினார். ரஜினியும் தோனியை சந்திக்க ஆர்வமாக இருப்பதாக தகவல் அனுப்பினார்.
இதையடுத்து இருவரும் இன்று சந்தித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டை செயிண்ட் மேரிசில் உள்ள நடிகர் தனுஷ் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
சமீபத்தில் வெளியான ரஜினியின் கபாலி படத்தை ரசித்துப் பார்த்தாக தோனி சொல்ல, தோனியின் ஆட்டம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரஜினி தெரிவித்தார்.
முன்னதாக, தனது திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் மேடையில் ரஜினி போல பேசி, அசத்தினார் தோனி. தனக்கு மிகவும் பிடித்த நடிகர், ரஜினி என்று தெரிவித்தார்.
ரஜினி போல தோனி பேசிய வீடியோ:
http://tamil.samayam.com/sports/cricket/dhoni-the-untold-story-tamil-movie-promotion-event/articleshow/54484400.cms