மீரட்:
உ.பி. மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 100 அடிய உயர சிலையுடன் ரூ. 30 கோடி செலவில் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீரட்டில் சர்தானா பகுதியில் கட்டப்படவுள்ள இக்கோவிலில் மோடிக்கு 100 அடி உயர சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 23ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பாஜ தேசிய செயலாளர் அமித்ஷா கலந்துகொள்கிறார்.
உ.பி.மாநில நீர்பாசன துறையின் ஓய்வு பெற்ற பொறியாளரும், மோடியின் தீவிர ஆதரவாளருமான ஜே.பி.சிங் கோவிலில் மோடி சிலை நிறுவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் கொள்கைகள் எனக்கு கடந்த 10 ஆண்டுகளாக பிடிக்கும். நான் அப்போது பணியில் இருந்ததால் எதையும் செய்ய முடியவில்லை’’ என்றார்.
[youtube-feed feed=1]