லக்னோ,

த்தரப்பிரதேசம் மாநிலத்தில்  மீரட்-லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 8 பெட்டிகள் தடம்புரண்டன.

மீரட் நகரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை முன்டாபான்டே-ராம்பூர் நிலையங்களுக்கு இடையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென  அந்த ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி, தடம் புரண்டு பக்கவாட்டில் கவிழ்ந்தன.

இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் கூறுகிறது.

மேலும், தீவிர படுகாயமடைந்தாவர்களுக்கு ரூ.50ஆயிரம் நிவாரணமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமும் அளிக்கப்படும் என உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.