நீரின் மருத்துவ பயன்கள்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:20)

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்பது  வள்ளுவன் வாக்கு

அலோபதி 

நம் உடலில் சிறியவர்களுக்கு  75%,  இளம் வயதில் 60%, முதுமையில் 50% தண்ணீர் நம் உடலில் இருக்கும்.

உதாரணம் 
ஒருவர் இளம் வயதில் உடல் எடை 70 கிலோ என்றால் அவர் உடலில் 42லி தண்ணீர் இருக்கும். அதில் செல்களுக்கு உள்ளே 28 லிட்டர் தண்ணீரும், செல்களுக்கு வெளியே 14 லிட்டர் தண்ணீரும் இருக்கும்

ஒருவர் நாள்தோறும் அவர் இருக்கும் புவியியல் அமைப்பு, வேலை செய்யும் விதம் போன்றவற்றைப்பொருத்து 1.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரும் அருந்தவேண்டும். குறிப்பாக ஆண்கள் தினமும் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்துவது அவசியம்.

பயன்கள்

நீர் , நம் உடல் கட்டமைப்பு செல்களை சீர்படுத்துத்துகிறது/ நீரானது நம் உடலின் வெப்பநிலையை சமன் செய்ய உதவுகிறது

உமிழ் மற்றும் இரைப்பை சுரப்பிகளில் நீர் மிகவும் தேவைபடுகிறது., எலும்பு மற்றும் தண்டு வடத்தில் அதிர்வுகளில் இருந்து தடுப்பதோடு, ஜவ்வுகளில் தேய்மானத்தையும் குறைக்கிறது, உண்ணும் உணவை ஜீரணம் செய்யவும் பயன்படுகிறது/ தேவைற்ற கழிவுகள்(டாக்சின்ஸ்) நீர் அருந்துவதன் மூலம் சிறுநீரில் வழியாக  வெளியேறுகிறது/ தாதுப்பொருட்கள், விட்டமின்கள் உடலின் அனைத்து இடங்களுக்கும் சமன் செய்து உடல் ஆரோக்கியத்தை காக்கிறது செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது/ மூளை, நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம் இவைகள்  நீரை மையமாகக்கொண்டே இயங்கிவருகிறது,

நீரிழப்பு 

நீரிழப்பினால் உடலில் உள்ள செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. மனமும் பாதிக்கிறது. எனவே தேவையான அளவு நீர் பருகுவது சிறந்தது, ஆனால் மிகவும் தூய்மைப்படுத்தி, வடிகட்டி தாதுக்கள் நிறைந்த சுத்தமான நீரை அருந்தினால் உடல் ஆரோக்கியம் பெறும்

இளஞ்சூடில் தண்ணீர் அருந்துவது எப்போதும் சிறந்தது

சித்த மருத்துவம்

1.ஆற்று நீரில் குளித்தால் வாதம் போகும்
அருவி நீரில் குளித்தால் பித்தம் போகும்

2.மோரைப்பெருக்கு, நீரை சுருக்கு
— சித்தர் வாக்கு

குளிர்ந்த நீரின் சிறப்பு
குளிர்ந்த நீரைக் குடிப்பதால் தலைச்சுற்றல், நாவறட்சி, மூச்சு நோய் , வாந்தி , உடற்சோர்வு, கண் எரிவு, இரத்தப் பித்தம் போன்ற நோய்கள்  தீரும்/

குளிர்ந்த நீரில் எப்போதும் குளிக்கலாம், இதனால் உடற்சோர்வு நீங்கி உற்சாகம் தரும்

குளிர்ந்த நீர் உண்ணத்தகாதவர்கள்

வயிற்றுவலி, இரத்த சோகை, குண்மம், மூலம், கிராணி, பசி குறைவு ஆகியர் நோய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரை தவிர்ப்பது நன்று

இளஞ்சூடான நீர்

இளஞ்சூடான நீர் (கொதிக்க வைத்து திட்டமாய் ஆற்றியது). இதை குடித்து வந்தால் வாத நோய்கள் , வலிகள், கப நோய், இருமல்  குறையும்,குரல் கம்மல் மற்றும் தொண்டை நலம் பெறும், இது திருத்தமாய் பேசவும் உதவும், விக்கல், சுரம், செரியா உணவு, வயிற்றுக்கோளாறு, உப்பசம், வயிற்றுப்பொருமல்  ஆகியவை நீங்கும்

மூல நோய் வராமல் இருக்க உதவும், பசியை ஊக்குவித்து, உடலை தேற்றுகிறது, உடலில் உள்ள தேவைற்ற மட,ஜலங்களை வெளியேற்றுகிறது,

வெந்நீரில் குளிப்பதால் உடல்சோர்வு, வலி நீங்கும்

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர், கல்லாவி
99429 22002