நம் பண்பாட்டில் பழைய காலத்தில் இருந்தே ஜாதிக்காய் பயன்பாடு இருந்து வந்துள்ளது. இது ஒரு மருத்துவப்பொருளாகவே நம்மிடையே விளங்கிவருகிறது.
ஜாதிக்காய். (Myristica Officinalis) பயன்பாடு
நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது, எலும்பு சதைகளில் உள்ள வலிகளை போக்குகிறது, ஜீரண சுரப்பிகளை தூண்டி குடல் இயக்கத்தினை சரி செய்கிறது, மேலும் வயிற்றில் ஏற்படும் உபவாசம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு இவை வராமல் தடுக்கிறது
ஜாதிக்காய் ஒரு போதைப்பொருள் என்ற சந்தேகம் இடையில் ஆனால் ஆராய்ச்சிகளால் பல ஆய்வுகளை மேற்கொண்டு அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் பொருள் அல்ல எனத் தெரிவித்துள்ளனர். ஜாதிக்காய் பவுடர் பாலில் எடுத்துக்கொள்ளும் போது மன உளைச்சலைப் போக்கி மன அமைதி ஏற்பட்டு தூக்கத்தினை (soporific) தூண்டுகிறது , Neuro Transmitter ல் உள்ள Dopomine, Serotonin ஆகியவற்றை தூண்டி தூக்கம் தூக்கத்தினை வரவைக்கிறது
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளைக் குறைக்கிறது. பற்சிதைவு , பற்சொத்தை வராமல் பாதுகாக்கிறது. படபடப்பிலிருந்து விடுபடச்செய்கிறது, உடல் எடை குறைப்பதற்கு ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம் மன உளைச்சல், மன அழுத்தத்தினை போக்கும் நிவாரணியாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.
ஜாதிக்காய் கொடியை மேற்பூச்சாக பயன்படுத்தும்போது முகப்பரு வராமல் தடுத்து முகப்பொலிவைத் தருகிறது. இதில் Anti Bacteria, Anti Fungal activities ஆகவும் செயல்படுகிறது.
சித்த மருத்துவம்
தாதுநட்டம் பேதி சருவாசி யஞ்சிரநோ
யோசுவா சங்காச முட்கிரணி-வேதா
டிலக்காய் வரும் பிணிபோ மேற்றமயல் பித்தன்
குலக்கா யருந்துவர்க்குக் கூறு.
– குணம்:- ஜாதிக்காய்க்கு விந்து நஷ்டம்
முதலிய வாதங்கள், தலைநோய், இரைப்பு, இருமல்,
துக்கமின்மை, ஆண்மைக்குறைவு, வயிற்று உபாசம் முதலிய நோய்கள் விலகும்
மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS., PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002