நன்னாரி வேர் (Hemidesmus Indicus).
நன்னாரிவேரானது மார்பக புற்றுநோயில் மற்றும் குடல்புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது. அதோடு செல்லின் வளர்சிதை மாற்றத்தினை ஒழுங்குப்படுத்தி புற்று நோயில் இருந்து பாதுகாக்கிறது. செல்லின் மைக்ரோகான்ட்ரியாவின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்கிறது
செல்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி கதிர்வீச்சினால் வரக்கூடிய புற்றுநோய் கூட தடுக்க வழி வகை செய்யும் என்ற சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றது.
அதிகமான நோய் எதிர்ப்புத்திறனை கொண்டுள்ளது. igG என்ற ஹிம்யூனோ குளோபிலினை immunogloblin தூண்டி வைரஸ் போன்ற நுண்கிருமி தாக்குதலில்களிலிருந்து பாதுகாக்கிறது
நன்னாரி வேர் காயங்களால் ஏற்படும் இரணங்களை சீக்கிரமாக ஆற்றுகிறது. தோல் நோயான தோலில் leucoderma எனப்படும் வெள்ளைத்தோல் நோயை குணப்படுத்துகிறது.
வயிற்றில் இருக்கக்கூடிய இரைப்பை மேற்படலத்தை பாதுகாத்து அமில சுரப்பு தன்மையை ஒழுங்குப்படுத்தி கேஸ்டிரிக் அல்சர் எனப்படும் குடல்புண்ணை ஆற்றுகிறது.
முதுமையில் வரக்கூடிய மறதி நோயான டிமென்சியா, அல்சைமர் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் நியாபகத்
தன்மைகளை அதிகப்படுத்துகிறது. மூளை செல்களை விரைவாக அழிந்துவிடுவதில் இருந்து பாதுகாக்கிறது
கல்லீரலை பாதுகாக்கிறது, முடக்குவாதம்(rheumatism) மற்றும் தன்உடல்தாங்கும்நோய் திறனை (autoimmune disease) பாதுகாக்கிறது.
சிறுநீரகத்தை சீராக இயங்கச்செய்கிறது. உடலில் இருக்கக்கூடிய நஞ்சுகளை (Diuretic) வெளியேற்றுகிறது,
சிறுநீரகத்தொற்று மற்றும் இனப்பெருக்க உறுப்பில் வரும் நோய் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெ ளியேறுவதை தடுப்பது, பால் வினை நோயில் இருப்பது தடுப்பது போன்ற வேலைகளை நன்னாரி வேர் திறம்பட செய்கிறது
வெப்பக்காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கில் இருந்தும் நன்னாரி சர்ப்த் அருந்தினால் குறையும்.
உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றிட உதவுகிறது, உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் வெ ளியேற்றி உடல் நலத்தினை காக்கிறது
வயோதித்தினை தள்ளிப்போட்டு இளமையாக இருப்பதற்கு, நோயின்றி வாழ்வதற்கும் நன்னாரி உதவுகிறது.
நன்னாரிவேர் (Hemidesmus Indicus)
நன்னுரி வேரை கறுக்கி யரைத்துமதன்
வின்னுரி யூனல் வெதுப்பியே – தின்னவெறி
தோணுது கற்றாழை சோற்றுக் கலந்துண்ணக்
காணாது வண்டு கடி
சித்தர் பாடல்
நன்னாரி வேரை நன்கு நறுக்கி கற்றாழைச்சாற்றுடன் கலந்து உண்டால் சிறிய அளவிலான வண்டு கடிகள் நீங்கும்
வயிற்றில் உள்ள புண்களை சரி செய்யும்
உடல்சூட்டைக்குறைக்கும்
அதிக தாகம் நவறட்சியைப்போக்கும்
நீரிழிவு, சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவர்களை கலந்தாலோசித்த பின்னர் குடிக்கலாம்
மருத்துவர் பாலாஜி கனகசபை., MBBS, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
99429 22002