நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்! தமிழக அரசு

ராதாகிருஷ்ணன்

சென்னை,

ச்சநீதி மன்ற தீர்ப்புப்படி தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு அடிப்படையிலே கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றும், நாளை மறுநாள் முதல் மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்றும்  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்தியஅரசு தமிழகத்திற்கு கொடுத்த உறுதிமொழியில் அடித்த பல்டி காரணமாக,  சுப்ரீம்கோர்ட், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வு அடிப்படையில் நாளை மறுநாள் மருத்துவ கவுன்சலிங் தொடங்க உள்ளது. ரேங்க் பட்டியல் நாளை பிற்பகல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Medical Counseling Based on Neet result! Government of Tamil Nadu