நியுஜெர்சி

மெரிக்க நாட்டில் இந்திய மருந்து நிறுவன அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் பிளைன்ஸ்போரோ நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீரங்கா அரவப்பள்ளி என்பவர் வசித்து வந்தார்.  இவருடைய மனைவி, மகன் மற்றும் மகளும் இவருடன் வசித்து வருகின்றனர்.  சுமார் 54 வயதாகும் இவர் மருந்து  நிறுவனம் ஒன்றில் தலைமை செயல் அதிகாரியாகப் பணி புரிந்து வருகிறார்.

ஸ்ரீரங்காவுக்கு சூதாட்டத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் நகருக்கு வெளியே உள்ள சூதாட்ட விடுதியில் சூதாடி சுமார் 10 ஆயிரம் டாலர் வெற்றி பெற்றுள்ளார்.  இவர் அதிகாலை தனது காரில் வீடு திரும்பும் போது ஒரு அமெரிக்க வாலிபர் இவரை மற்றொரு காரில் பின் தொடர்ந்துள்ளார்.  வீட்டை அடைந்த ஸ்ரீரங்காவை மிரட்டி அந்த வாலிபர் பணத்தைக் கொள்ளை அடிக்க முயன்றுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே நடந்த தகராற்றில் வாலிபர் தனது துப்பாக்கியால் ஸ்ரீரங்காவை சுட்டுக் கொன்று விட்டார்.  ஸ்ரீரங்கா குடும்பத்தினர் அப்போது உறங்கிக் கொண்டிருந்தனர்.  அவர்கள் எழுந்து வருவதற்குள் வாலிபர் தட்டி ஓடி விட்டார்.  அவரை காவல்துறையினர் தேடிக் கைது செய்துள்ளனர்.  அந்த வாலிபர் பெயர் ஜெகாய் ரீட் ஜான் என்பதும் வயது 27 என்பதும் தெரிய வந்துள்ளது.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.