டில்லி:

லாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம்  ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச்ச சேர்ந்த 8வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 3 போலீசார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், டில்லி உயர்நீதி மன்றம், தானாக முன்வந்து (சுமோட்டோ) வழக்காக விசாரணைக்கு ஏற்றது.

இந்த வழக்கை  டில்லி  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரணை  செய்தது. அப்போது,  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் பார்த்தாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று வேதனை தெரிவித்திருந்தனர்.

மேலும், இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையும், பெயர்களையும், அடையாளங்களையும் வெளியிடுவது அவர்களின் தனிப்பட்ட, அந்தரங்க உரிமையை மீறும் செயலாகும். புகைப்படத்தையும் அடையாளங்களையும் வெளியிட்ட ஊடகங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்பது குறித்து விளக்கம் அளிக்க, படங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கத்துவா சிறுமியின் பெயரை பயன்படுத்திய ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது.

கத்துவா வழக்கில் பெண் அடையாளத்தை வெளிப்படுத்திய ஊடக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ர 10 லட்சம் ரூபாய்  அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளது.