சென்னை:

மிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம்  குறைக்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

ரியல் எஸ்டேட் துறையில்  மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வந்த தமிழக அரசு கடந்த 2017ம் ஆண்டு பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை உயர்ந்தை அதிகரித்ததைத் தொடர்ந்து சற்றே சறுக்கியது. பின்னர் மோடி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், விளை நிலங்கள், மனைகளாக மாற்றக்கூடாது  போன்ற அறிவிப்புகளால்,  ரியல் எஸ்டேட் துறை ஆட்டம் கண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சொத்து வழிகாட்டி மதிப்பை தமிழகஅரசு உயர்த்தியதால்,  நிலம், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவுக்காக அதிக தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக   பத்திரப்பதிவு குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில்  பங்கேற்று பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பத்திர பதிவு விலையை குறைக்க அரசும் பரீசிலித்து வருவதாக  கூறினார்.

மேலும், ரியல் எஸ்டேட் கட்டுமான துறையில் ஒற்றை சாளர முறையில் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை வீட்டு வசதி வாரியம் மூலமாக 13 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கபட்டு, 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பது தொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.