திரிபோலி

லிபியாவில் உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லிபியா நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் குறைந்துள்ளது. அங்கு நடந்து வரும் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  ஐ எஸ் தீவிரவாதிகளும் அந்நாட்டில் அதிக அளவில் காலூன்றி வருகின்றனர்.

தற்போது லிபியா நாட்டின் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக தேசிய ராணுவ தளபதி கலிபா ஹாஃப்டரின் படையினர் போட்டி அரசு நடத்தி வருகின்றனர். இவர்கள் லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியை கைப்பற்ற தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் திரிபோலியில் தற்போது மிகவும் பதட்ட நிலை நீடிக்கிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “லிபியாவில் உள்ள பதட்ட நிலையால் பல இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பி உள்ளனர். ஆயினும்திரிபோலியின் இன்னும் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்டு வருகின்றனர். அவர்களை உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்துகிறோம். இல்லையென்றால் அவர்கள் வெளியேறுவதில் சிரமம் உண்டாகும்” என அறிவித்துள்ளார்.