கல்வி தகுதி: பி.டெக்: எம்.ஈ.. முன் அனுபவம்: பேராசிரியர்.. தொழில்: முறுக்கு விற்பனை..
ஊரடங்கால் வீதிக்கு வந்த வாத்தியார்களில் மகேஸ்வரனும் ஒருவர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த மகேஸ்வரன், பி.டெக். படித்துள்ளார். கம்யூட்டர் சயின்ஸ் (பொறியியல்) எம்.ஈ.பட்டமும் பெற்றுள்ளார்.
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
ஊரடங்கு காரணமாகக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், இவர் வேலை பார்த்த பொறியியல் கல்லூரியும் அடைக்கப்பட்டது.
சொந்த ஊரான நெய்வேலிக்குத் திரும்பிய, மகேஸ்வரனுக்கு மனைவி மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளது.
வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது?
வீட்டிலேயே முறுக்கு பிழிந்து விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த தொழிலில் அவருக்குத் தினமும் 500 ரூபாய் வருமானம் வருகிறது.
கொரோனா ஓய்ந்து, ஊரடங்கு முற்றிலுமாக முடிந்து, மீண்டும் மாமூல் நிலை திரும்பும் வரை, முறுக்கு விற்பனை தான், தொழில் என்கிறார், மகேஸ்வரன்.
-பா.பாரதி.