சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக நாளை நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் என்று போலீசிடம் திமுக உறுதி அளித்தது. உறுதிமொழி அளித்த பிறகும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந் நிலையில், தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் கூட்டத்துக்கு தடையா?  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எப்படி நடத்த முடிந்தது?

இந்தியாவின் பல மாநிலங்களில் முதலமைச்சர்கள் கூட்டம் நடத்துகின்றனரே? தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?  என்று கேள்வி எழுப்பி உள்ளார்.