சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்து, வலது கை தோள்பட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பிளேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த மே மாதம் வைகோ, வீட்டில் வழுக்கி விழுந்ததில், அவரது வலது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, எலும்புகளை இணைக்கும் வகையில், பிளேட் வைத்து சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்த சிகிச்சை நடைபெற்று 6 மாதங்களை கடந்துள்ளதால், அவரது உடைந்த தோள்பட்டை எலும்பு மீண்டும் இணைந்திருக்கும் என்பதால், ஏற்கனவே அறுவை சிகிச்சையின்போது உள்ளே வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் பிளேட்டை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று அவருக்கு தோள்பட்டையில் அறுவைசிகிச்சை செய்து பிளேட்டை எடுக்க மருத்துவர்களின் பரிந்துரையின்படி, இன்று அப்போலோவில் வைகோ அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.