சென்னை
வரும் ஜூன் மாதம் ம தி மு க வின் பொது குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் ம தி மு க 30 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது கட்சிக் கொடியை ஏற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்/ பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது அவர்,
கட்சிக்கு புது வாழ்வு தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இக் கட்சியின் அமைப்பு தேர்தல் 75 சதவீதம் முடிவடைந்து விட்டது. எனவே வரும் ஜூன் மாதம் பொதுக்குழு நடைபெறும். திருப்பூர் துரைசாமி சொத்துப் பட்டியல் குறித்து எதுவுமே தெரியாமல் பேசுகிறார். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித் துறைக்குக் கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
பொதுவாக எந்தக் கட்சியும் சொத்துப் பட்டியல் வெளியிடாது. மாறாகக் கட்சியின் வரவு, செலவு கணக்கு, தணிக்கையாளர் மற்றும் வருமான வரித் துறையிடம்தான் சமர்ப்பிக்கப்படும்.
ஆளுநர் திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என்று கூறுகிறார். ஆனால் ஆளுநர்தான் காலாவதியாகிப் போனவர் மற்றும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி. அவர் இங்குக் குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பாஜக, இந்து அமைப்புகளுக்கான பிரதிநிதியாக இருக்கலாமே தவிர, ஆளுநர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் எந்த ஆளுநரும் செய்யாத தவறுகளை ஆர்.என்.ரவி செய்வதால் அவர் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும்.“
எனத் தெரிவித்துள்ளார்.