சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு லோக்சபா, ஒரு ராஜ் சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டு அதில் வேட்பாளராக மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி களமிறக்கப்பட்டுள்ளார்.
மதிமுக கணேசமூர்த்தி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் தனி சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்த நிலையில், தற்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, கணேச மூர்த்தி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளமுது
ஈரோடு மொடக்குறிச்சியில் இன்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தல் கலந்துகொண்டு பேசிய மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே, ஐஜேகே, விடுதலைச் சிறுத்தைகள் (ஒரு தொகுதி), கொமதேக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.