சேலம்:
சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.
நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று புதிய கட்சியை ஆரம்பித்தார் சந்திரகுமார். இந்த கட்சி திமுக கூட்டணியுடன இணைந்து தேர்தலை சந்தித்தது. தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சியை திமுகவுடன் இணைக்க மதேமுதிக தலைவர் சந்திரகுமார் தலைமையிலான நிர்வாகிகள் கூடி முடிவெடுத்தனர்.
அதன்படி, தி.மு.க.வுடன் மக்கள் தே.மு.தி.க. இணைப்பு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
ம.தே.மு.தி.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், பி.எச்.சேகர் ஆகியோர் தங்களது கட்சியை சேர்ந்த ஆதரவாளர்களுடன் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர்.
சுமார் 25 ஆயிரம் பேர்கள் தேமுதிகவை விட்டு திமுகவில் சேர்ந்துள்ளதாக சந்திரகுமார் தெரிவித்தார். அவர்களுக்கான உறுப்பினர் படிவங்களையும் ஸ்டாலினிடம் வழங்கினார்.
விழாவில், மாற்று கட்சியினரை வரவேற்று பேசிய ஸ்டாலின் முக்கிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினார்.