2011 உலக கோப்பை போட்டியின் போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்.

ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்த மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டிடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு அதனை இடிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர், ஐ, ஜெ, கே ஆகிய காலரிகள் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி பார்வையாளர்களை அனுமதிக்க அரசு தடை விதித்தது.

இதனால் பல சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சென்னை இழந்தது.

இவ்விரு தடைகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டதை அடுத்து தற்போது சேப்பாக்கம் மைதானம் புதுப் பொலிவுடன் தயாராகி வருகிறது.

பழைய பார்வையாளர் மாடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டுவதற்கு சுற்றுசூழல் அனுமதிக்காக காத்திருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.