டெல்லி: மருத்துவ படிப்பு இடங்களுக்கான கட்டுப்பாடு தொடர்பாக மத்தியஅரசு புதிய விதிகளை வெளியிட்ட நிலையில், அதற்கு தமிழ்நாடு உள்பட தென்மாவட்டங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து,  மத்தியஅரசின் திட்டத்தி தேசிய மருத்துவ ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

ந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, புதிதாக மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்றாலோ, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றாலோ குறைந்தபட்சமாக என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று  பல புதிய விதிகளை வெளியிட்டது.

அதன்படி, “ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பத்து லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் எந்த விதிக்கு அந்த மருத்துவக் கல்லூரி” பொருந்தியிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

10லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் என்ற மக்கள் தொகைக்கு ஏற்ப எம்பிபிஎஸ் கல்லூரிகள் மற்றும் இடங்களை சேர்க்கும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை கொண்டு வந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் 2025-26 ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. இதற்கு  தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதிக மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் உள்ளதால், மத்தியஅரசின் இந்த திட்டம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  மக்கள் தொகைக்கு ஏற்ப எம்பிபிஎஸ் கல்லூரிகள் மற்றும் இடங்களை சேர்க்கும் திட்டத்தை என்எம்சி ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் 2025-26 ஆம் ஆண்டுக்கு 5 தென் மாநிலங்கள் அதிக கல்லூரிகள், இடங்களை சேர்ப்பதில் இருந்து திறம்பட தடை விதித்ததன் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் ஒத்திவைத்தது. விரிவான ஆலோசனைக்கு பிறகு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கவேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 1,000 பேருக்கு 1.6 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ள சில பின்தங்கிய மாநிலங்களில் 4,000 பேருக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளனர். பின்தங்கிய மாநிலங்கள் சிலவற்றில் மிகக் குறைவான மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளை அங்கு ஈர்க்கும் முயற்சியாகவே இந்த விதி வகுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் சில மருத்துவ நிபுணர்கள்.

தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மக்கள் தொகையைப் பொறுத்தவரை, 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 7 கோடியே 21 லட்சமாக இருந்த நிலையில், தற்போது சுமார் எட்டு கோடியே 36 லட்சமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஆகவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,300 எம்.பி.பி.எஸ். இடங்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போதே அந்த எண்ணிக்கை 8,500-ஐ தாண்டிவிட்டது. ஆகவே, தமிழ்நாட்டில் இனி புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதோ, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பதோ இனிமேல் இயலாத காரியமாக மாறக்கூடும்.

தமிழ்நாடு தவிர எந்தத் தென்னிந்திய மாநிலமும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது. மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், கோவா, சண்டிகர், புதுச்சேரி ஆகிய இடங்களிலும் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் இருப்பதிலேயே அதிகபட்சமாக பத்து லட்சம் பேருக்கு 1,329 மருத்துவ இடங்கள் உள்ளன. இதனால் மத்தியஅரசின் புதிய விதிகளுக்கு தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

துதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு காட்டமாக கடிதம் எழுதினார். அதில்,   “இத்தகைய கட்டுப்பாடு களை விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிற மாநில மக்கள் மட்டுமல்லாது, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற வருகிறார்கள் என்றும் தரமான மருத்துவச் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாநில மட்டத்தில் பார்க்கும்போது, போது மான மருத்துவர்கள் இருப்பதாகத் தெரிந்தாலும் பல மாவட்டங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை நீடிப்பதாகவும் தெரிவித்து உள்ளார். பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதன் மூலமே இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியுமென்றும் கூறியிருக்கிறார்.

மாநிலத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதற்கு, மாநில அரசுகள் மற்றும் தனியாரின் முதலீடுகளே காரணம் என்றும் மத்திய அரசின் முதலீடு காரணமல்ல என்றும் கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் போன்ற திட்டங்களே இன்னும் துவங்கப்படாத நிலையில், இம்மாதிரி கட்டுப்பாடுகள் மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் தமிழ்நாட்டில் புதிதாக எந்தத் திட்டமும் துவங்கப்பட முடியாத நிலைக்கு வழிவகுக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.