சென்னை: தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முன்னதாக கலந்தாய்வு வரும் மாணவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது
சென்னையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தமிழகஅரசு அறிவித்தபடி இன்று தொடங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்தாய்வை தொடங்கி வைக்கிறார். மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமுக விலகலை கடைபிடிக்கும் வகையில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதனை தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நவ.21ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் படிக்க 34,424 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.