சென்னை: இன்று கோவை மாநகராட்சி மேயர்  பதவிக்கான ரகசிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊழல் புகார் எதிரொலியாக நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை பதவி விலக கட்சி தலைமை உத்தரவிட்டது. அதன்படி அவர்கள் தங்களது மேயர் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்டு 5ந்தேதியும், கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்டு 6ந்தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேயரை தேர்ந்தெடுக்கும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டு வந்தது. முக்கிய அமைச்சர்களை கோவை, நெல்லைக்கு அனுப்பி அதிருப்தியாளர்களை அமைத்தி படுத்தியதுடன் மேயர் வேட்பாளரையும் அறிவித்தது.

அதன்படி, நேற்று  (ஆகஸ்டு 5ந்தேதி நெல்லை மாநகர மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில்,  திமுக தலைமை அறிவித்தது  மாநகராட்சி மேயர் திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனுக்கு  போட்டியாக  திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் கிருஷ்ணசாமி 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.  இது கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் கோவை மாநகர மேயர் தேர்தலில் நடைபெற்றுவிடக்கூடாது என திமுக தலைமை முக்கிய உத்தரவுகளை வழங்கி உள்ளது. அதன்படி அமைச்சர்கள் நேரு, முத்துசாமி ஆகியோர் திமுக கவுன்சிலர்களை அழைத்து மீண்டும் பேசியுள்ளனர்.

ஏற்கனவே கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக 29-ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக தலைமை நேற்று அறிவித்துள்ளது,  கட்சியில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நலையில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு  73 திமுக கவுன்சிலர்களும்  அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர்  சில அறிவுரைகளையும், எச்சரிக்கையும் விடுத்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக,    திமுக தலைமை அறிவித்த மேயர் வேட்பாளருக்கு போட்டியாக , யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டதுடன்,   கவுன்சிலர்கள் அனைவரையும் ஓரே இடத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.