ஆனால், இதுவரை அலுவலகம் ஏதும் கட்டப்படவில்லை. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியர் அலுவலகம் எங்கே? காவல்துறை ஆணையர் அலுவலகம் எங்கே? என்று கேள்வி எழுப்பியவர், தரங்கம்பாடி சாலையில் இருக்கும் ஆர்.டி.ஓ. அலுவலக பங்களாவில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. வேளாண் விரிவாக்க மையத்தில்தான் எஸ்.பி. அலுவலகம் இருக்கிறது. இதுதான் புதிய மாவட்டமா?
மயிலாடுதுறை என்ற புதிய மாவட்டம் உதயமாகும் இந்த நாளில் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை உடைந்து முக்கியப் பகுதிகளில் சாக்கடை ஓடுகிறது என்று பொதுமக்கள் சொல்கிறார்கள்.
இதுதான் ஒரு மாவட்டத் தலைநகரத்தின் லட்சணமா? புதிய மாவட்டம் உதயமானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதி செய்து தரப்பட வேண்டாமா? சும்மா பேர் வைத்தால் போதுமா?
‘பேர் வைத்தாயே? சோறு வைத்தாயா?’ என்று கேட்பார்கள். அதுபோல ஒரு முதல்வர் நடந்து கொள்ளலாமா?
நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர், இதுவரை நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஏதாவது பதில் சொல்லி இருக்கிறாரா? என்று பார்த்தேன். எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவரால் சொல்ல முடிந்தால்தானே சொல்வார்?”
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.