தமிழகத்தில் கொரோனா தொற்று லாக்டவுன் காரணமாக, வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் அரசியல் கட்சிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், பொதுநல நிறுவனங்கள் போட்டிப்போட்டி செயலாற்றி வந்தன.
இதன் காரணமாக பலருக்கு தொற்று பரவி சிகிச்சை பெற்று வந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகளையுச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி திமுக எம்பி சே.ராமலிங்கம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் தற்போது 3வது எம்.பியாக ராமலிங்கத்துக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.