மயிலாடுதுறை:  கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தள்ளது.

கடந்த கடந்த 2003-ஆம் அதிமுக ஆட்சியின்போது மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து சில கட்சிகள்  ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர். அப்போது,  மயிலாடுதுறை மாவட்டத்தில்,  மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து விசிக பேரணி நடத்தியது. இந்த பேரணி வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இது விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலர்மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ஜூலை 31ந்தேதி விசாரணைக்கு ஆஜராக மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  விசாரணைக்கு  ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.விஜயகுமாரி உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, வழக்கு தொடர்பாக திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.