சென்னை:

தேமுதிக தலைமை அலுவலகத்தில் மேதின கொடியேற்றி வணக்கம் செலுத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  இடைதேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன் என்று கூறினார்.

இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சித்தலைவர் தலைவர் விஜயகாந்த் கொடியேற்றினார். இதில் நூற்றுக்கணக்கான  தேமுதிக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக 3 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தார்.

3 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தவர்,.  எதிர்க்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள்; அதில் எது உண்மை எது பொய் என்பதை சபாநாயகர், முடிவு எடுக்க முடியும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் சில கட்சிகள் ஜாதி மோதலை ஏவிவிடுவதாக குற்றம் சாட்டியவர்,  ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டது கண்டிக்க கூடிய விஷயம், அதன் மூலம் யாரும் ஆதாயம் தேடக்கூடாது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் ஒரேகுலம், ஒரே இனம் ஒன்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேறும்  என்று தெரிவித்தார்.

ஜாதி கலவரம் ஏற்பட்ட இடங்களில்  மறு தேர்தல் நடத்த வேடும இல்லையா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும் என்று கூறி பிரேமலதா,  பணம் விநியோகம் செய்ததனால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முடிவை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.

தேர்தல் தொடர்பான அனைத்து  அனைத்து கேள்விகளுக்கும் மே 23 ஆம் தேதி  முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றவர், தேமுதிக-ன் கூட்டணி மக்கள் வரவேற்கும் கூட்டணி. மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும் என்றவர், நடைபெற உள்ள  4 தொகுதிகளிலும்  எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றவர், 4 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.