டில்லி,

குஜன் கட்சி தலைவர் மாயாவதி தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ராஜ்யசபாவில் ஆவேசமாக  கூறி உள்ளார்..

பாரதியஜனதா அரசு பதவியேற்றபிறகு நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக  அறிவித்து உள்ளார்.

மத்தியில் பாரதியஜனதா அரசு பதவி ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் பசு பாதுகாலர்கள் என்ற பெயரால் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உ.பி.யை சேர்ந்த தலித் எம்.பி.யான மாயாவதி தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்றும், தான் தலித்தாக இருந்தும்,  என இன மக்களுக்கு என்னால் எந்தவித உதவியும் செய்ய முடியாத நிலையில், தனக்கு இந்த பதவி தேவையில்லை என்று கூறி உள்ளார்.

குறிப்பாக பாரதியஜனதா ஆளும் மாநிலங்களில் தலித்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. அதுகுறித்து மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டி உள்ள மம்தா,

மோடி அரசு தலித்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்றும் கூறி தனது மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அவர் அறிவித்து உள்ளார்.