லக்னோ: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏவை கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்து மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டம், என்பிஆர் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல மாநிலங்களில் போராட்டம் ஓயவில்லை.
அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூகநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் பெரும்பாலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராமாபாய் பாரிகார் என்பவர் அதற்கு ஆதரவாக பேசியுள்ளார்.
இதையடுத்து, அவரைக் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: பிஎஸ்பி என்று ஒழுக்கம் நிறைந்த கட்சி. அந்த ஒழுக்கத்தை மீறினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அது எம்எல்ஏ, எம்பி என யாராக இருந்தாலும் சரி.
அதன் படிதான் ரமாபாய் பாரிக்கர் தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று கூறியிருக்கிறார்.