லக்னோ:
கும்பமேளாவில் புனித நீராடினால், தேர்தல் வாக்குறுதி தந்து நிறைவேற்றாத பாவம் போய்விடுமா? என பிரதமர் மோடிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமா மாயாவதியின் பதிவில், கும்பமேளாவில் புனித நீராடினாலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத பாவம் போகாது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி விவகாரத்தில் பாஜக அரசை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.பழி வாங்குதல், சாதி மற்றும் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.