ழக்கமான கதைகளைப்போல் அல்லாமல் வித்தியாசமான கதைக்களம்.

சாகா வரம் பெற்று ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ பேராசைப்படுகிறார்  ஒரு விஞ்ஞானி. அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார். அந்த விஞ்ஞானியின் விபரீத முயற்சியை காவல்துறை அதிகாரி ஒருவர் தடுப்பதுதான் கதை.

விஞ்ஞானி உடலுக்கு மரியாதை செலுத்தும் உடற்பயிற்சி பயிற்சியாளர்… அவர் ஒரு கொலை செய்துவிட துரத்தும் காவல் அதிகாரி.. என்று ஆரம்பிக்கும்போதே, ஜெட் வேகத்தல் பறக்க ஆரம்பிக்கிறது படம்.

ஒரு துப்பறியும் படத்துக்கு தேவையான திரைக்கதையை கச்சிகமாக அமைத்திருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகள்… அவை குறித்த மர்ம முடிச்சுக்ளை அவிழ்க்கும் நேர்த்தி என.. படத்துக்குள் நம்மை நுழைத்துவிடும் நலன் குமாரசாமிக்கு ஒரு பொக்கே.

காவல்துறை ஆய்வாளர்  குமரன் வேடத்தில் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார்.  காவல்துறை ஆய்வாளருக்கான கம்பீரத் தோற்றம், உடல் மொழி என்று அசத்துகிறார். குற்றவாளியைப் பிடிப்தில் காட்டும் தீவிரம், எதையும் சந்தேகத்துடன் நோக்கும் கண்கள் என்று.. வெல்டன் சந்தீப்.

ஆனால், காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்கான கம்பீர குரல் இல்லாததுதான் குறை.

மனோதத்துவ மருத்துவராக வருகிறார் லாவண்யா திரிபாதி. அழகு என்பதோடு, கதாபாத்திரத்துக்கும் நன்கு பொருந்தி வருகிறார். சிறப்பு.

வில்லன்களாக டேனியல் பாலாஜியும் ஜாக்கி ஷெராஃபும் வருகிறார்கள். முதல் பாதியை டேனியல் பாலாஜியும் இரண்டாம் பாதியை ஜாக்கி ஷெராஃபும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். இருவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிலும் உச்சகட்ட காட்சியில்  ஜாக்கி ஷெராஃப் நடிப்பு அசத்தல்.

கே எஸ் ரவிக்குமார், , பகவதி பெருமாள், ஜெயபிரகாஷ், மைம் கோபி,அக்‌ஷரா கவுடா என்று நிறைய கதாபாத்திரங்கள். ஆனால் அனைவரும் மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்குத் தேவையான இசையைக் கொடுத்து நம்மை (கூடுதலாக) அதிரவைத்திருக்கிறார் இசை அமைப்பாளற் ஜிப்ரான்.

அதே போல் ஒளப்பதிவாளர் கோபி அமர்நாத்தின் கேமராவும் படத்துக்கு மேலும் மெருகூட்டுகிறது. ஜான் பாலின் எடிட்டிங்  கச்சிதம். அதே போல கலை இயக்குநரும் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக ஆராய்ச்சி சாலை, பிரமிக்கவைக்கிறது.

 

ஒரு சில இடங்களில் தென்படும் லாஜிக் கோளாறுகள்.. படத்தின் வேகத்தைத் தடை செய்யும் பாடல்கள்.. ஆனாலும் சுவராஸ்யமான படம். அதுவும் இரண்டாம் பாதியில் திரையைவிட்டு கண்ணை அகற்ற முடியாதபடி படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பயப்படுத்தும் மாயவனைப் பார்க்க பயப்படாமல் செல்லலாம்.