நியூயார்க்

உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பன்னாட்டு மீட்புக் குழு இதனை அறிவித்துள்ளது.

“கொரோனாவின் தீவிரத்தை போரால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழ்மையான நாடுகளில் இனி வரும் நாட்களில் காண நேரிடலாம்.

குறிப்பாக போரின் வலிகளை அதிகம் சுமக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

தற்போதைய சூழலை துல்லியமாக கணித்தால் உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்கள் அதாவது நூறு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே இதனை தவிர்க்க தேவையான உதவிகளையும், உடனடி நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்” என அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

நிதி சார்ந்த, மனிதாபிமான உதவிகளை உலகநாடுகள் சிறுதும் தயங்காது செய்ய வேண்டும் என உலக நாடுகளுக்கு பன்னாட்டு மீட்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.