டெல்லி:

லைநகர் டில்லியில் வரும் 23ந்தேதி நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

(பைல் படம்)

 

நாடு முழுவதும் வரும் 19ந்தேதியுடன் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவுக்கு வரும் நிலையில் மே 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய கட்சிகள்  மட்டுமின்றி இந்த முறை மாநில கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வரும் 23ந்தேதி டில்லியில் காங்கிரஸ் கட்சி அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், டெல்லியில் வரும் 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இந்த கூட்டத்தில் எதிர்கால அரசியல் பற்றி அதில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் தாங்கள்  அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.‘

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.