மாஸ்கோ

ரும் 23 ஆம் தேதி ரஷ்யப் பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் சீன நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்

உக்ரைன் மற்றும் ரஷியா-இடையே ஆன போரில் தொடக்கத்தில் இருந்தே ரஷ்யாவுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடான சீனா உள்ளது. இந்தப் போர் ஓர் ஆண்டை கடந்தும் நடந்து வரும் நிலையில் அதனை நிறுத்தும்படி உலக நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. போரை நிறுத்த் உதவி செய்வதாகச் சீனாவும் உறுதியளித்தது.

சீன அதிபர் ஷி ஜின்பெங் ரஷ்யாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் போர் முடிந்தபாடில்லை.  இந்நிலையில் தற்போது ரஷிய பிரதமர் மைக்கேல் மிஷுஸ்டின் வருகிற 23-ந் தேதி சீனாவுக்குச் சென்று அதிபர் ஜின்பெங் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனுடனான போர் தொடரும் நேரத்தில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.