சென்னை:
தமிழகத்தில் கடந்த 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அன்று செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் மதுரையில் வாக்குப்பெட்டி வைத்துள்ள அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் நாளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறைக்கு தேவையான பாதுகாப்பு குறித்துமுக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.