தமிழக சட்டமன்ற தேர்தல் நாளான மே 16ம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ்ரூபவ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இது மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன்படி உறுதிப்படுத்தப்படுகிறது.
மே 16 அன்று ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மேலும் விவரங்களை www.labour.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.