மயிலாடுதுறை: நாளை குருப்பெயா்ச்சி விழாவையொட்டி, குரு ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள குரு ஸ்தலத்தில், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நிகழாண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். நாளை (மே 1ந்தேதி) நண்பகல் 12.59 மணிக்கு மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சி பெறும் ஸ்தானத்தை விட, குருவின் 5,7,9 பார்வை பெறக்கூடிய சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்களைப் பெற்றிடும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
நவக்கிரஹங்களில் ஒருவர் குரு பகவான். கல்விக்கு அதிபதியாக இருக்கும் குரு, தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இதனாலேயே அவரை பிரஹஸ்பதி என்றும் அழைப்பவர். ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர். வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். குரு பகவானின் திசை வடக்கு.
நவகிரங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ் வரா் கோயில். இக்கோவிலில் வீற்றிருக்கும் குருபகவான் விசேஷமானவர். குரு பெயர்ச்சி மற்றும் திருவிழாக்காலங்களில் இக்கோவி லில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சி அடையும் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு குரு பெயர்ச்சி நாளை (மே 1ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த ஏப். 26-ஆம் தேதி லட்சார்ச்சனை விழா தொடங்கி, 28-இல் நிறைவடைந்தது. நாளை குரு பெயர்சசியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்க ளின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இந்த குருப்பெயா்ச்சி விழாவில் நாடு முழுவதும் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வா் என்பதால், கூட்ட நெரிசலை தடுக்க வும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாருஸ்ரீ உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, பக்தா்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய தகரத்தாலான பந்தல் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உத்தரவின் பேரில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
குரு பெயர்ச்சியை ஒட்டி, ஏற்கனவே முதல்கட்ட லட்சார்சனை முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை மே 6-ந்தேதி தொடங்கி மே மாதம் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சாா்ச்சனை காலை 9.30 முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடைபெறும்.
இந்த லட்சார்ச்சனையின்போது, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரா்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.