புதுடெல்லி: ஐபிஎல் தொடரை வெறும் பொழுதுபோக்கிற்காக விளையாடும் கிளென் மேக்ஸ்வெல், சொந்த தேசிய அணி என்றால் மட்டும் தனி அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்று மீண்டும் காட்டமாக விமர்சித்துள்ளார் வீரேந்திர சேவாக்.

கடந்த 13வது ஐபிஎல் சீசனில், பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல்லின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. 13 போட்டிகளில் விளையாடி வெறும் 108 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால், இவரை, ரூ.10 கோடி மதிப்புள்ள நடனப் பெண் என்று கிண்டலடித்திருந்தார் சேவாக். ஏனெனில், இவர் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார்.

தற்போதைய நிலையில், இந்திய அணிக்கெதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் அருமையாக ஆடிவருகிறார் மேகஸ்வெல். இதனையடுத்து மீண்டும் மேக்ஸ்வெல்லை கடுமையாக சாடியுள்ளார் சேவாக்.

“ஐபிஎல் தொடரில் உள்ள நெருக்கடிகள் பற்றி மேக்ஸ்வெல்லுக்கு கவலையில்லை. அவர், பொழுதுபோக்கிற்காக மட்டுமே ஐபிஎல் ஆடுகிறார். களத்தில் அங்குமிங்கும் செல்வார்; ஆனால், ரன்கள் மட்டும் எடுக்கமாட்டார்.

ஆஸ்திரேலிய அணியில், சில போட்டிகள் சரியாக ஆடாவிட்டால் அணியிலிருந்து தூக்கி விடுவார்கள். அப்படி நடந்தால், அணியில் மீண்டும் இடம்பிடிப்பது கடினம். இதை உணர்ந்துதான் தேசிய அணிக்காக அவர் நன்றாக ஆடுகிறார். ஐபிஎல் தொடரின்போதான பயிற்சிகளில் அவர் அதிக அக்கறை காட்டமாட்டார்” என்றுள்ளார் சேவாக்.

 

[youtube-feed feed=1]