போர்ட் லூயிஸ்

மொரிஷியஸ் பெண் அதிபர் அமீனா குரிப் கடன் அட்டையை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை ஒட்டி ராஜினாமா செய்துள்ளார்.

மொரிஷியஸ் நாட்டு பெண் அதிபர் அமீனா குரிப் பகிம்.    இவருக்கு அரசு ஒரு கடன் அட்டையை வழங்கி உள்ளது.   இந்த அட்டை அவர் அரசு சார்ந்த பணிகளுக்கான பொருட்களை வாங்க உபயோகப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.    சமீபத்தில் அவர் துபாய், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா சென்றுள்ள இடங்களில் தனது சொந்த உபயோகத்துக்காக தங்க நகைகள் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்களை அவர் வாங்கினார்.   அவருக்கு அரசு வழங்கிய கடன் அட்டை மூலமாக இதற்காக  சுமார் ரூ. 7 லட்சம் வரை அவர் செலவு செய்ததாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவித்தது.   அதையொட்டி  பல்வேறு பிரிவினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவ்ர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என பலரும் கூற ஆரம்பித்தனர்.    அதை ஒட்டி அதிபர் அமினா குரிப் தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  வரும் 23ஆம் தேதி வரை அவர் பதவியில் நீடிப்பார் என சொல்லப்படுகிறது.